இந்த படம் உங்க மேலதிகாரிங்க கண்ணுல படாம பார்த்துக்கோங்க!
Friday, January 23, 2009
Wednesday, January 21, 2009
Saturday, January 17, 2009
'So Great' M.P சோ!!
துக்ளக் 39 ஆம் ஆண்டு விழா பற்றிய டோண்டு அவர்கள் பதிவு மற்றும்
நண்பர் இட்லிவடையின் ஆடியோ இணைப்புடன் கூடிய பதிவுகளை படித்திருப்பீர்கள். அதில் சில நண்பர்கள் 'சோ' அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்த நலப்பணிகள் பற்றிய விவரங்கள் கேட்டு இருந்தனர்! நம்ம தான் 2003 ஆம் ஆண்டு முதல் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் (!!) துக்ளக் இதழ்களை பத்திரப்படுத்தி இருக்கிறோமே, இந்த விவரங்களை எடுத்துப்போட்டு நம் பதிவுக்கான அஸ்திவாரத்தை போடுவோமே என்ற எண்ணம் எழுந்தது! பரணில் ஏறி பொக்கிஷத்தை தேடினால் நலப்பணி சம்பந்தமான ஐந்து இதழ்களில் ஒன்றே ஒன்று தான் இருந்தது. இருப்பினும், ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால் கையில் இருந்தது தான் ஐந்தாவது பகுதி. அதில் நலப்பணியின் விவரங்களை தொடர்ச்சியான எண் குறியீட்டுடன் அளித்திருந்ததால் 75 முதல் 94 ஆம் திட்ட உதவி விவரங்களுடன் கூடிய இறுதிப்பகுதி இப்போது உங்கள் கணினித்திரையில்.
இதே போல் இப்போதிருக்கும் 40 மக்களவை உறுப்பினர்களும் ஏனைய மாநிலங்களவை உறுப்பினர்களும் தனது பதவிக்காலம் முடிய மூன்று மாதங்கள் இருக்கும்பொழுது தங்களது உறுப்பினர் நிதியிலிருந்து செய்த நலப்பணிகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். நாம் அனைவரும் தகவல் உரிமை சட்டத்தின் மூலமாக இதை சாதிக்க இயலும் என்று நம்புகிறேன். அதிக விவரங்களுக்கு பார்க்கவும் 5thPillar.
நன்றி: துக்ளக் இதழ் : 03-12-2003!
நவீன பாரதி.
Subscribe to:
Posts (Atom)