Thursday, January 7, 2010

கெட்டி மேளம், கெட்டி மேளம்!!


விவாஹ சங்கமம் - ஜனவரி 24 - பெங்களுரு

கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டை கட்டிப்பார்! என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். பொருத்தமான வரன் கிடைக்க பல நாள் அலைய வேண்டியிருக்கும் பலருக்கு. அவ்வாறு வரன் தேடும் பிராமின் சமூகத்தினருக்கு உதவும் விதமாக http://www.tamilbrahmins.com/ அமைப்பு வரும் ஜனவரி 24 அன்று, மல்லேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்தில் ஒரு விவாஹ சங்கமம் (பெற்றோர்கள் சந்திப்பு) ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தமிழ் பிராமின் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பிராமின் சமூகத்தினரும் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்! கலை, கலாச்சாரம் மற்றும் பக்தியினை வளர்க்கும் விதமாக பிராமின் சமூகத்தினருக்கு ஒரு சிறந்த மேடையாக விளங்கும் http://www.tamilbrahmins.com/ , பக்தி பாடல்களும், கர்நாடக இசை பாடல்களும் கேட்க விரும்புவோருக்கு ஓர் வரப்ரசாதம்!

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர், http://www.tamilbrahmins.com/ வலைதளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவாஹ சங்கமம் குறித்த விவரங்களை வலைதளத்தின் வலப்புறம் உள்ள இணைப்பு மூலம் எளிதில் அறியலாம்.
சேவை நோக்கோடு ஏற்பாடு செய்யப்படும் இந்த விவாஹ சங்கமம் நிகழ்ச்சி பற்றி தங்களது நண்பர்களுக்கு தெரிவித்து, அவர்களது இல்லங்களில் கெட்டி மேளம் ஒலிக்க அவசியம் உதவி செய்யுங்கள்!

Friday, January 23, 2009

செலவை குறைக்கராங்களாம்!


இந்த படம் உங்க மேலதிகாரிங்க கண்ணுல படாம பார்த்துக்கோங்க!

Wednesday, January 21, 2009

Saturday, January 17, 2009

'So Great' M.P சோ!!

துக்ளக் 39 ஆம் ஆண்டு விழா பற்றிய டோண்டு அவர்கள் பதிவு மற்றும்
நண்பர் இட்லிவடையின் ஆடியோ இணைப்புடன் கூடிய பதிவுகளை படித்திருப்பீர்கள். அதில் சில நண்பர்கள் 'சோ' அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்த நலப்பணிகள் பற்றிய விவரங்கள் கேட்டு இருந்தனர்! நம்ம தான் 2003 ஆம் ஆண்டு முதல் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் (!!) துக்ளக் இதழ்களை பத்திரப்படுத்தி இருக்கிறோமே, இந்த விவரங்களை எடுத்துப்போட்டு நம் பதிவுக்கான அஸ்திவாரத்தை போடுவோமே என்ற எண்ணம் எழுந்தது! பரணில் ஏறி பொக்கிஷத்தை தேடினால் நலப்பணி சம்பந்தமான ஐந்து இதழ்களில் ஒன்றே ஒன்று தான் இருந்தது. இருப்பினும், ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால் கையில் இருந்தது தான் ஐந்தாவது பகுதி. அதில் நலப்பணியின் விவரங்களை தொடர்ச்சியான எண் குறியீட்டுடன் அளித்திருந்ததால் 75 முதல் 94 ஆம் திட்ட உதவி விவரங்களுடன் கூடிய இறுதிப்பகுதி இப்போது உங்கள் கணினித்திரையில்.

இதே போல் இப்போதிருக்கும் 40 மக்களவை உறுப்பினர்களும் ஏனைய மாநிலங்களவை உறுப்பினர்களும் தனது பதவிக்காலம் முடிய மூன்று மாதங்கள் இருக்கும்பொழுது தங்களது உறுப்பினர் நிதியிலிருந்து செய்த நலப்பணிகள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். நாம் அனைவரும் தகவல் உரிமை சட்டத்தின் மூலமாக இதை சாதிக்க இயலும் என்று நம்புகிறேன். அதிக விவரங்களுக்கு பார்க்கவும் 5thPillar.
நன்றி: துக்ளக் இதழ் : 03-12-2003!
நவீன பாரதி.

Thursday, May 22, 2008

சிவராஜ் பாட்டிலின் உளறல்.

http://jataayu.blogspot.com/2008/05/idiot-anti-indian-home-minister-sack.html
http://idlyvadai.blogspot.com/2008/05/blog-post_22.html

திரு.சிவராஜ் பாட்டில் தனது பதவி-ஐ உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவர் உளறியது நீதிமன்ற அவமதிப்பாகும். தனக்கு வந்த பிரதமர் பதவியை த்யாகம் செய்த சோனியா அம்மையார் சிவராஜ் பாட்டில்-ஐயும் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

http://www.ipetitions.com/petition/fire-shivraj-patil/

Wednesday, May 21, 2008

http://dondu.blogspot.com/2008/05/tourism-shoot.html

மிகவும் சுவாரஸ்யமான பதிவு. ஆங்கில லிபிக்கு பதிலாக நீங்கள் ஹிந்தி லிபி-ஐ கையாண்டிருக்கலாமே!

Tuesday, May 20, 2008

http://arvindneela.blogspot.com/2008/05/blog-post_13.html
நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் முன் ஜாக்கிரதை அவசியம்.பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியதில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பங்கில்லை எனும் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களின் பொய் பிரச்சாரத்தினை படித்தீர்களா?
நவீன பாரதி